| ADDED : ஜூன் 03, 2024 06:03 AM
காஞ்சிபுரம் : பெரிய காஞ்சிபுரம் பூக்கடை சத்திரம் எதிரில் உள்ள வளாகத்தில் ஆண்டுதோறும் கங்கையம்மனுக்கு கோடை உற்சவம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பு ஆண்டுக்கான கோடை உற்சவம் நேற்று முன்தினம், நள்ளிரவு 12:00 மணிக்கு அம்மன் வீதியுலாவுடன் துவங்கியது.இதில் மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய கங்கை யம்மன், நான்கு ராஜ வீதிகளில் உலா வந்தார். வழிநெடுகிலும் பக்தர்கள் கற்பூர தீபாராதனை காண்பித்து வழிபட்டனர்.நேற்று, பிற்பகல் 12:00 மணிக்கு அம்மன் வர்ணிப்பும், தொடர்ந்து கூழ்வார்த்தலும், மாலை 6:00 மணிக்கு நாதஸ்வர நிகழ்ச்சியும், இரவு நாடகமும் நடந்தது. விழாவிற்கான ஏற்பாட்டை விழாக்குழுவினர் மற்றும் பக்தர்கள் இணைந்து செய்திருந்தனர்.