உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வெயிலால் கருகும் தென்னைகள்

வெயிலால் கருகும் தென்னைகள்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், நீர்வளத் துறை கட்டுப்பாட்டில், 381 ஏரிகள் உள்ளன. இதுதவிர, விவசாயிகளுக்கு சொந்தமான ஆழ்துளை கிணறுகளும் உள்ளன.இந்த இருவித நீர் பாசனங்களை நம்பி விவசாயிகள் நெல், கேழ்வரகு, வேர்க்கடலை ஆகிய பல வித பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர்.இதில், காஞ்சிபுரம் அடுத்த, புள்ளலுார், தண்டலம், புரிசை ஆகிய பகுதிகளில், சொர்ணவாரி பருவத்தில் நெல் பயிரிட்டுள்ளனர். தினசரி நீர் பாசனமும் செய்யப்படுகிறது.இருப்பினும், தினசரி 43 டிகிரி செல்ஷியஸ் வெயில் வெளுத்து வாங்குகிறது. இந்த வெயிலால், நீர் பாசனம் வரப்பு ஓரமாக இருக்கும் தென்னை மரங்களும் கருகி வருகின்றன.இதே நிலை நீடித்தால், தென்னை மரங்களை வேருடன் அகற்ற வேண்டி இருக்கும் என, விவசாயிகள் வருத்தத்துடன் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை