மேலும் செய்திகள்
செடிகளால் குடிநீர் தொட்டி வலுவிழக்கும் அபாயம்
8 hour(s) ago
சென்னை:அண்ணா நகர் மேற்கு வசந்தம் காலனியைச் சேர்ந்தவர் அபிநந்தன் ஜெயின், 26; தனியார் நிறுவன ஊழியர்.இவரது 'வாட்ஸாப்' எண்ணிற்கு, 'டெலிகிராம்' செயலியில் இணைப்பு ஒன்று வந்துள்ளது.அதில் 'ஆன்லைன்' தளத்தில்,'டாஸ்க்' ஒன்றை செய்து முடித்தால் லாபம் கிடைக்கும் என விளம்பரம் வந்துள்ளது. அதை நம்பி, முதலில் 50 ரூபாய் செலுத்திய அபிநந்தனுக்கு, 150 ரூபாய் கிடைத்துள்ளது. பின், 2,000 ரூபாய் செலுத்திய போது, 2,800 ரூபாயாக கிடைத்துள்ளது. இதேபோல் அபிநந்தன், 1 லட்சத்து 81,000 ரூபாய் வரை செலுத்தியுள்ளார்.அதன்பின், அபிநந்தனுக்கு எதிர்தரப்பிலிருந்து பணமும் கிடைக்காமல், தகவலும் இல்லாமல் இருந்துள்ளது. இதுகுறித்து கேட்ட போது, நிறுவனம் நஷ்டத்தில் சென்றதாகக் கூறி இணைப்பை துண்டித்துள்ளனர்.திருமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
8 hour(s) ago