உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / அறிவிக்கப்படாத மின்தடை தென்னேரி வாசிகள் அவதி

அறிவிக்கப்படாத மின்தடை தென்னேரி வாசிகள் அவதி

காஞ்சிபுரம்:வாலாஜாபாத் துணை மின் நிலையத்தில் இருந்து தென்னேரி, கட்டவாக்கம், அகரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு மின் வினியோகம் செய்யப்படுகிறது. கடந்த ஒரு வாரமாக, தென்னேரி, அகரம் ஆகிய பகுதிகளில் அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. குறிப்பாக, இரவு நேரங்களில் மின் தடை ஏற்பட்டால், நான்கு மணி நேரத்திற்கு பின் மின்சாரம் வழங்கப்படுகிறது. மின்வாரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டாலும், சரியாக பதில் அளிப்பதில்லை என, மின் நுகர்வோர் இடையே புலம்பலை ஏற்படுத்தி உள்ளது. எனவே, சீரான மின்சாரம் வழங்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை