உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ஊராட்சி அலுவலகத்திற்காக கட்டப்பட்ட கட்டடம் வீண்

ஊராட்சி அலுவலகத்திற்காக கட்டப்பட்ட கட்டடம் வீண்

படப்பை : வாஸ்து பிரச்னை காரணமாக படப்பை ஊராட்சி புதிய கட்டடத்தை திறந்து, பயன்படுத்த தயக்கம் காட்டுவதால் 17.64 லட்சம் ரூபாய் அரசு நிதி வீணாகி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.குன்றத்துார் ஒன்றியத்தில், படப்பை ஊராட்சி அமைந்துள்ளது. இங்கு 15,000த்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இதன் ஊராட்சி தலைவராக தி.மு.க.,வைச் சேர்ந்த கர்ணன் பதவி வகிக்கிறார்.படப்பை பேருந்து நிலையம் அருகே, படப்பை ஊராட்சி அலுவலகம் உள்ளது. இந்த கட்டடம் பழுதடைந்து இட நெருக்கடியுடன் உள்ளது.இதனால், படப்பை பழைய பத்திரப்பதிவு அலுவலகம் இயங்கிய இடத்தின் அருகே 17.64 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டடம் 2019ம் ஆண்டு கட்டப்பட்டது.இந்த புதிய அலுவலகம் கட்டி முடிக்கப்பட்டு, ஐந்து ஆண்டுகளாகியும் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாமல் உள்ளது. பூட்டியே கிடக்கும் புதிய ஊராட்சி கட்டட வளாகம் புதர் மண்டி வருகிறது.இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:படப்பை ஊராட்சி கட்டடம் அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. வாஸ்து பிரச்னை காரணமாக இந்த கட்டடத்தை தி.மு.க.,வினர் திறக்க ஆர்வம் காட்டவில்லை. சில மாதங்களுக்கு முன், தனியார் தொண்டு நிறுவனத்தின் பள்ளி இயங்குவதற்கு இந்த கட்டடம் ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.புதிய கட்டடத்தில் ஊராட்சி அலுவலகத்தை இடமாற்றம் செய்து, பயன்படுத்த மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ