உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / லிப்ட் கொடுப்பதாக அழைத்து நகை பறித்தவர் கைது

லிப்ட் கொடுப்பதாக அழைத்து நகை பறித்தவர் கைது

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் அருகே, உதவி செய்வது போல நடித்து, காரில் அழைத்துச் சென்று, மூதாட்டியிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட, கார் ஓட்டுனரை ஸ்ரீபெரும்புதுார் போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 64, இவரது மனைவி ரேவதி, 58. ஜூலை 31ம் தேதி, இருவரும் ஸ்ரீபெரும்புதுார் அடுத்த, மாம்பாக்கத்தில் உள்ள மகள் தனலட்சுமி வீட்டிற்கு வந்தனர்.இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை, வெங்கடேசன் காது வலி காரணமாக, தண்டலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்ற நிலையில், அவரது மனைவி ரேவதியும், ரத்த அழுத்தம் பரிசோதனை செய்யலாம் என திட்டமிட்டு, அதே மருத்துவமனைக்கு செல்ல, மாம்பாக்கம் பேருந்து நிறுத்தத்தில் பேருந்திற்காக காத்திருந்தார்.அப்போது, இனோவா' காரில் வந்த மர்ம நபர், ரேவதியிடம் எங்கே செல்கிறீர்கள் என கேட்டு, தானும் அந்த வழியாகத்தான் செல்வதாக கூறி, காரில் ஏற்றி சென்றுள்ளார்.பேரம்பாக்கம் -- தண்டலம் சாலையில், வளர்புரம் அருகே சென்ற போது, காரை ஓட்டி சென்ற நபர், ரேவதி கழுத்தில் இருந்த 8 சவரன் தங்க செயினை பறித்து, அங்கே அவரை இறக்கிவிட்டு அங்கிருந்து தப்பினார்.இது குறித்து ரேவதி அளித்த புகாரின்படி, ஸ்ரீபெரும்புதுார் போலீசார் வழக்கு பதிந்து, 'சிசிடிவி' காட்சிகளை ஆராய்ந்து, 24 மணி நேரத்தில் நகை பறிப்பில் ஈடுபட்ட கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த கார் ஓட்டுனர் சிபு, 31, என்பவரை கைது செய்து, 8 சவரன் தங்க நகையை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை