உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கம்பம் நட்டாச்சு; ஒயர் கொடுக்கலே! இணைப்பு வழங்குவதில் மின்வாரியம் தாமதம்

கம்பம் நட்டாச்சு; ஒயர் கொடுக்கலே! இணைப்பு வழங்குவதில் மின்வாரியம் தாமதம்

காஞ்சிபுரம் : உத்திரமேரூர் பேரூராட்சியில், 18 வார்டுகளில், 149 தெருக்கள் உள்ளன. இத்தெருவில், வீட்டு மின் இணைப்பு மற்றும் இரவு நேரத்தில் வெளிச்சம் தரும் வகையில், மின்தட பாதைக்காக சாலையோரத்தில் மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.இதில், முத்துகிருஷ்ணா அவென்யூ, கவியரசு கண்ணதாசன் தெரு, செங்குந்த பிள்ளையார் கோவில் தெரு, நரசிம்ம நகர், முருகர் கோவில் தெரு மற்றும் வேடபாளையம் உள்ளிட்ட பகுதிகளில், அமைக்கப்பட்டிருந்த பழைய மின்கம்பம் சிமென்ட் காரை உதிர்ந்து சேதமடைந்தும், சாய்ந்த நிலையிலும் இருந்தன.இதனால், பலத்த காற்றுடன் மழை பெய்தால், மின்கம்பம் சாய்ந்து மின் விபத்து ஏற்படும் சூழல் உள்ளதால், பழைய கம்பத்திற்கு மாற்றாக புதிய மின்கம்பம் அமைக்க வேண்டும் என, அப்பகுதியினர் மின்வாரியத்திடம் வலியுறுத்தினர்.இதையடுத்து, சேதமடைந்த பழைய மின் கம்பத்திற்கு மாற்றாக அதன் அருகிலேயே புதிதாக மின்வாரியம் சார்பில் மின்கம்பம் அமைக்கப்பட்டது. புதிய கம்பங்கள் அமைக்கப்பட்டு இரு வாரங்களுக்கு மேலாகியும், இணைப்பு வழங்கப்படாமல் உள்ளது.இதனால், பலத்த காற்று வீசினால், பழைய மின் கம்பம், எப்போது வேண்டுமானாலும் உடைந்து விழுந்து, அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் புதிதாக மின் கம்பம் அமைத்ததின் நோக்கமே வீணாகும் நிலை உள்ளது.எனவே, புதிய கம்பங்களுக்கு மின் இணைப்பு வழங்கவும், சேதமடைந்த பழைய மின்கம்பங்களை அகற்றவும் மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை