உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சாலை சந்திப்பு படுமோசம் வாகன ஓட்டிகள் அவதி

சாலை சந்திப்பு படுமோசம் வாகன ஓட்டிகள் அவதி

திம்மசமுத்திரம்:காஞ்சிபுரம் ஒன்றியம் நெட்டேரி, கருப்படிதட்டடை உள்ளிட்ட பகுதியில் இருந்து அம்மன் குளம் சாலை வழியாக திம்மசமுத்திரம், வெள்ளைகேட் உள்ளிட்ட பகுதிக்கு செல்லும் சாலை உள்ளது.வாகன போக்குவரத்தும், பொதுமக்கள் நடமாட்டமும் அதிகமுள்ள அம்மன் குளம் சாலையுடன், திம்மசமுத்திரம் கிராமத்திற்கு செல்லும் சாலை இணையும் இடத்தில், மண் அரிப்பு ஏற்பட்டு சாலை சேதமடைந்த நிலையில் உள்ளது.இதனால், திம்மசமுத்திரத்தில் இருந்து, அம்மன் குளம் சாலைக்கு வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் வளைவில் திரும்பும்போது, சாலை சேதமடைந்த பகுதியில் நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.எனவே, அம்மன் குளம் சாலையுடன், திம்மசமுத்திரம் செல்லும் சாலை இணையும் இடத்தில், சேதமடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை