உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / போக்குவரத்திற்கு லாயக்கற்ற சாலை ஸ்ரீபெரும்புதுாரில் தொடரும் அவதி

போக்குவரத்திற்கு லாயக்கற்ற சாலை ஸ்ரீபெரும்புதுாரில் தொடரும் அவதி

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சி, 7வது வார்டு, சுபத்ரா நகரில் 50க்கும் அதிகமான வீடுகள் உள்ளன. மேலும், சுபத்ரா நகர் பிரதான சாலை வழியே, ராஜிவ் காந்தி நகர், சரளா நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு ஏராளமான வாகனங்கள் சென்று வரும் பிரதான சாலையாக உள்ளது.இந்நிலையில், கடந்த மாதம் சுபத்ரா நகர் பிரதான சாலையில் பாதாள சாக்கடை திட்டத்தில், 'மேன்ஹோல்' அமைக்க பள்ளம் தோண்டப்பட்டது. பணிகள் நிறைவடைந்த நிலையில், மேன்ஹோல் அமைக்க தோண்டப்பட்ட பள்ளம் சரியாக மூடப்படவில்லை.இதனால், நேற்று முன்தினம் பெய்த மழையால், இந்த சாலை சகதியாக மாறி, பயணிக்க லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதனால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், கடும் அவதி அடைந்து வருகின்றனர். வழவழப்பான சாலையில், சேற்றில் சறுக்கிய நிலையில் சென்று வருகின்றனர்.எனவே, மோசமான சாலையை சீரமைக்க, பேரூராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை