உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ரசாயன தொட்டியில் தவறி விழுந்தவர் பலி

ரசாயன தொட்டியில் தவறி விழுந்தவர் பலி

குன்றத்துார், : கடலுார் மாவட்டத்தை சேர்ந்தவர் பிரவீன்குமார், 20. இவர் குன்றத்துார் அருகே திருமுடிவாக்கம் சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள, சாரதா எலக்ரோ பிளேட்டர் என்ற, தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார்.நேற்று முன்தினம் இந்த தொழிற்சாலையில் உள்ள 'சோடியம் ஹைட்ராக்சைடு' ரசாயனம் நிரப்பட்ட தொட்டி அருகே, பிரவீன்குமார் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த தொட்டியில் ரசாயனம் கலக்கும் இயந்திரம் பழுதானதால், அதை சரிசெய்ய முயன்றபோது பிரவீன்குமார் தவறி ரசாயன தொட்டியில் விழுந்தார். இதைப்பார்த்த அங்கிருந்த ஊழியர்கள் பிரவீன்குமாரை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.98 சதவீதம் உடல் வெந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த பிரவீன்குமார், நேற்று காலை சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த சம்பவம் குறித்து குன்றத்துார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி