உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மயங்கி விழுந்த பணிப்பெண் பலி

மயங்கி விழுந்த பணிப்பெண் பலி

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார், ஸ்ரீதேவி நகரைச் சேர்ந்தவர் லலிதா, 57. இருங்காட்டுக்கோட்டையில் உள்ள, ஸ்ரீநாத் என்பரின் வீட்டில், வீட்டு வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம், வழக்கம்போல ஸ்ரீநாத் வீட்டில் வேலை செய்து கொண்டிருக்கும் போது மயங்கி விழுந்தார். இதையடுத்து, அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, மருத்துவ பரிசோதனையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஸ்ரீபெரும்புதுார் போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ