உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / அமைந்தகரையில் 10 கடைகளில் கைவரிசை சுடுகாடு பூட்டு கூட விட்டு வைக்காத திருடன்

அமைந்தகரையில் 10 கடைகளில் கைவரிசை சுடுகாடு பூட்டு கூட விட்டு வைக்காத திருடன்

சென்னை:அரும்பாக்கம், அமைந்தகரை பகுதிக்கு உட்பட பூந்தமல்லி நெடுஞ்சாலையில், நுாற்றுக்கணக்கான கடைகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.இப்பகுதியில், அடுத்தடுத்து 10 கடைகளின்பூட்டு உடைக்கப்பட்டு திருடப்பட்டிருப்பதாக அரும்பாக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.சம்பவ இடத்தை சென்று ஆய்வு செய்தபோது, அரும்பாக்கம் காவல் எல்லைக்கு உட்பட அடுத்தடுத்து, எட்டு கடைகளில் பூட்டை உடைத்து திருட முயற்சி செய்யபட்டது. அதில் ஐந்து கடைகள் காலியாக இருந்தன.மற்ற இரு கடையில் ஒன்று கண்ணாடி கடையும், மற்றொரு பரிசு பொருட்கள் விற்கும் கடையிலும் திருட முயற்சி நடந்துள்ளது. இதில், பரிசு பொருட்கள் விற்கும் கடையில் மொபைல் போன் மட்டும் திருடப்பட்டுள்ளது.அதேவரிசையில், அமைந்தகரை காவல் எல்லையில், 'டாஸ்மாக்' கடை ஒன்றின் பூட்டை உடைத்து, சில்லரையாக 400 ரூபாய் மற்றும் பீர் பாட்டில்கள் திருட்டு போயுள்ளன. அதன் அருகில் உள்ள மளிகை கடையிலும் திருட முயற்சி நடந்துள்ளது.சம்பவம் குறித்து, அமைந்தகரை, அரும்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.

வடமாநில வாலிபர்

இது குறித்து போலீசார் கூறியதாவது:அரும்பாக்கம், அமைந்தகரை காவல் எல்லையில், அடுத்தடுத்த 10 கடைகளின் பூட்டு உடைக்கப்பட்டு திருட முயற்சி நடந்துள்ளது. கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்ததில், வடமாநில வாலிபர் ஒருவர் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.முதல் ஐந்து கடைகள் காலியாக இருந்ததால், அடுத்தடுத்து கடைகள் உடைக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில், கடை என நினைத்து, அதேவரிசையில் உள்ள அரும்பாக்கம் சுடுகாட்டின் நுழைவாயல்பூட்டும் உடைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதுதொடர்பாக, கடை ஊழியர்களிடம் விசாரித்து வருகிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை