| ADDED : ஆக 17, 2024 07:55 PM
காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், நடப்பாண்டிற்கான ஆவணி மாதம் பவித்ர உற்சவம் நேற்று துவங்கியது.இன்று பவித்ர அதிவாஸம் நடைபெறுகிறது. இதில், மூலவர், தாயார், சக்ரத்தாழ்வார், நரசிம்மர் மூலவ மூர்த்திகளுக்கு திருமஞ்சனம் நடைபெற்று பவித்ரம் சாற்றுதல் வைபவம் நடைபெறும். இதில், கோவில் கிளி மண்டபத்தில் அமைந்துள்ள யாகசாலையில் காலை, மாலையில் இரு வேளையும் ஹோமம் நடைபெறும்.நாளை முதல் 24ம் தேதி வரை பவித்ர உற்சவத்தையொட்டி, தினமும் மாலை 5:30 மணியளவில் பெருமாள், உபயநாச்சியார் திருவடி கோவில் புறப்பாடு நடைபெற்று, அங்கிருந்து திருக்கோவிலில் கிளி மண்டபத்திற்கு வந்தடைவார். ஸ்ரீபெருமாள், உபயநாச்சியார் முன்னிலையில் மாலை நேர ஹோமம் நடைபெறும்.பவித்ர உற்சவம் நிறைவு நாளான வரும் 25ம் தேதி பவித்ர உற்சவம் பூர்ணாஹூதி, நடைபெறுகிறது.