காஞ்சிபுரம் : சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார், சுங்குவார்சத்திரம், காஞ்சிபுரம், -பொன்னேரிக்கரை, பாலுச்செட்டிசத்திரம் உள்ளிட்ட பிரதான இடங்களில் சந்திப்புகள் உள்ளன. இங்கு, நாள்தோறும் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை கடக்கும் வாகனங்களால், நெரிசல் மற்றும் வாகன விபத்து ஏற்பட்டு வந்தது.அதன்படி, காஞ்சிபுரம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், 2023 டிசம்பர் வரையில், 728 விபத்து மற்றும், 212க்கும் மேற்பட்ட உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக காவல் துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது.இதை தவிர்ப்பதற்கு, நான்குவழிச் சாலையில் இருந்து, ஆறுவழிச் சாலையாகவும், 18 இடங்களில் சிறுபாலங்கள் மற்றும் மூன்று இடங்களில் மேம்பாலங்களும் அமைய உள்ளன.இதற்கு, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மூலமாக, 654 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, பணிகள் துவங்கப்பட்டு உள்ளன. மேம்பாலம் கட்டும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது.சென்னையில் இருந்து, பெங்களூரு மார்க்கமாக செல்லும் வாகனங்கள், ஏனாத்துார் தனியார் மருத்துவமனை அருகே, தான்தோன்றி தனமாக நின்று செல்கின்றன. இதுபோன்ற நேரங்களில், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.இதை தவிர்க்க, போக்குவரத்து போலீசார் ஆய்வு செய்து, பேருந்துகள் முறையாக நின்று செல்ல வழி வகை செய்ய வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.