உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / டூ - வீலர் திருடியவர் கைது

டூ - வீலர் திருடியவர் கைது

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம், திருக்காலிமேடு பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன், 40; இவர், 'ஸ்பிளண்டர் பிளஸ்' இருசக்கர வாகனத்தை, நேற்று முன்தினம் இரவு பெரியார் நகர் தாபாவில் விட்டு சென்றார். இதை, மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.இதுகுறித்து, காஞ்சிபுரம் தாலுகா தனிப்படை போலீசார் தேடி வந்தனர். ராணிப்பேட்டை மாவட்டம், ஆனைமல்லுார் கிராமத்தைச் சேர்ந்த தனசேகர், 48. என்பவர் திருடிச் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து அவரை, கைது செய்து தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ