உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ஆராநேரி சாலையில் பராமரிப்பில்லாத மின்விளக்கு

ஆராநேரி சாலையில் பராமரிப்பில்லாத மின்விளக்கு

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் ஒன்றித்திற்குட்பட்ட போந்துாரில் இருந்து, ஆராநேரி செல்லும் சாலை உள்ளது. வல்லம், ஸ்ரீபெரும்புதுார் சிப்காட் தொழிற்சாலையில் பணிபுரியும் ஏராளமான ஊழியர்கள் நாள்தோறும் இந்த சாலை வழியே சென்று வருகின்றனர்.தவிர, பெண்கள், பள்ளி -- கல்லுாரி செல்லும் மாணவ - மாணவியர் இந்த சாலை வழியே தினமும் நடந்து சென்று வருகின்றனர். இந்த சாலையில், மின் கம்பங்களின் வழியே 20க்கும் மேற்பட்ட மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.இந்த நிலையில், பல மாதங்களாக பெரும்பாலான மின்விளக்கு பராமரிப்பு இல்லாததால், முற்றிலும் பழுதடைந்து உள்ளது. இதனால், இரவு நேரத்தில் பணி முடிந்து செல்லும் பெண்கள் இருளில் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.இருள் சூழ்ந்த சாலையில் நடந்து செல்லும் வடமாநில தொழிலாளர்களை குறிவைத்து வழிப்பறி, மொபைல் போன் பறிப்பு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இருசக்கர வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.எனவே, இந்த சாலையில், பழுதடைந்து உள்ள மின்விளக்குகளை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ