உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / புஞ்சையரசந்தாங்கல் சாலையில் வர்ணம் பூசப்படாத வேகத்தடை

புஞ்சையரசந்தாங்கல் சாலையில் வர்ணம் பூசப்படாத வேகத்தடை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஒன்றியம், அய்யங்கார்குளத்தில் இருந்து புஞ்சையரசந்தாங்கல் மீனாட்சி நகர் வழியாக காஞ்சிபுரம் செல்லும் புறவழி சாலை உள்ளது. இங்குள்ள சாலை சந்திப்பில் வாகன விபத்து ஏற்படுவதை தடுக்க, வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது.வேகத்தடைக்கு வெள்ளை நிற வர்ணம் பூசப்படாததாலும், வேகத்தடையின் மீது, இரவில் ஒளிரும் வகையில், ஒளிபிரதிபலிப்பான் ஒட்டப்படாமல் உள்ளதால், இரவு நேரத்தில் வேகத்தடையை கவனிக்காமல் வேகமாக வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர்.எனவே, புஞ்சையரசந்தாங்கல் மீனாட்சி நகரில் உள்ள வேகத்தடைக்கு வெள்ளை நிற வர்ணம் பூசுவதோடு, இரவில் ஒளிரும் வகையில், ஒளி பிரதிபலிப்பான் அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ