உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சேதமடைந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

சேதமடைந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் வெள்ளைகுளம் தெரு மற்றும் பாக்குபேட்டையில் இருந்து, புத்தேரி ஊராட்சி, சாலபோகம் உள்ளிட்ட பகுதிக்கு செல்வோர் கங்கையம்மன் கோவில் தெரு வழியாகச் சென்று வருகின்றனர்.வாகன போக்குவரத்தும், பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த இச்சாலை சேதமடைந்து பல்லாங்குழி சாலையாக மாறியுள்ளது. இதனால், சாதாரண மழைக்கே சாலை சேதமடைந்த பகுதியில் மழைநீர் குட்டைபோல தேங்குகிறது.இதனால், பள்ளம் உள்ள பகுதியில் செல்லும் பாதசாரிகள் மட்டுமின்றி இருசக்கர வாகன ஓட்டிகளும் நிலைதடுமாறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ள கங்கையம்மன் கோவில் தெருவில் பழைய சாலையை அகற்றிவிட்டு, புதிய சாலை அமைக்க வேண்டும் என, புத்தேரி ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ