| ADDED : ஜூலை 22, 2024 11:38 PM
காஞ்சிபுரம், : காஞ்சிபுரம் வணிகர் வீதியில் இருந்து, பல்லவர்மேடு, ஒ.பி.குளம் தெரு, நரசிங்கராயர் தெரு உள்ளிட்ட பகுதிக்கு செல்வோர் ராஜகோபால் பூபதி தெரு வழியாக சென்று வருகின்றனர்.வாகன போக்குவரத்தும், பொதுமக்கள் நடமாட்டமும் மிகுந்த இச்சாலையில், மழையின் காரணமாகவும், பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு சாலையில் வழிந்தோடிய கழிவு நீரால் மண் அரிப்பு ஏற்பட்டு சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது.இதனால், லேசான மழைக்கே சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ள பகுதியில் மழைநீர் தேங்குகிறது.இதனால், சாலையில் பள்ளம் இருப்பது தெரியாமல் செல்லும் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். வேகமாக செல்லும் வாகனங்களால் நடந்து செல்வோர் மீது சகதி தெறிக்கிறது.எனவே, ராஜகோபால் பூபதி தெருவில், சேதம் அடைந்த சாலையை 'பேட்ச்' ஒர்க் பணியாக சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தியுள்ளனர்.