| ADDED : ஜூன் 18, 2024 05:10 AM
ஸ்ரீபெரும்புதுார், : வல்லக்கோட்டை ஸ்ரீசந்தியம்மன் கோவில் உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு, ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் சாலை விரிவாக்கத்திற்காக நெடுஞ்சாலைத் துறையினர் கோவிலை அகற்றினர்.இதை அடுத்து, அப்பகுதியினர் ஒன்றிணைந்து, அதே பகுதியில் சந்தியம்மன் கோவிலை புதிதாக கட்டினர். இந்நிலையில், கோவில் கட்டுமான பணிகள் முடிவடைந்த நிலையில், நேற்று முன்தினம் காலை கணபதி பூஜை, மகா தீபாராதனை நடைபெற்றன.இதை அடுத்து, நேற்று, காலை 10:00 மணி அளவில், கோவில் கலசத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.