| ADDED : ஜூன் 12, 2024 02:00 AM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி, 46வது வார்டு, ஓரிக்கை புது வசந்தம் நகரில், 18.10 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக கட்டப்பட்ட ரேஷன் கடை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திறக்கப்பட்டது.விசாலமான இடத்தில் அமைக்கப்பட்டுள்ள ரேஷன் கடைக்கு சுற்றுச்சுவர் அமைக்காததால், தெரு நாய்களின் புகலிடமாக மாறியுள்ளதால், நாய்கள் ரேஷன் கடை வளாகத்தை அசுத்தம் செய்கின்றன. இதனால், கடை வளாகத்தில் துர்நாற்றம் வீசுகிறது.மேலும், அப்பகுதியில் வசிப்போர் ரேஷன் கடை வளாகத்தை தங்களது கார்களை இலவசமாக பார்க்கிங் செய்யும் இடமாக பயன்படுத்தி வருகின்றனர்.எனவே, நாய்களின் கழிப்பறையாகவும், இலவசமாக கார்கள் நிறுத்தும் பார்க்கிங் இடமாகவும் மாறியுள்ள ஓரிக்கை வசந்தம் நகர், ரேஷன் கடைக்கு, சுற்றுச்சுவருடன், நுழைவாயில் கதவு அமைக்க வேண்டும் என, ஓரிக்கை புது வசந்தம் நகரினர் வலியுறுத்தி உள்ளனர்.