உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காய்கறிகள் விலை உயர்வு பீன்ஸ் கிலோ 150; அவரை 120

காய்கறிகள் விலை உயர்வு பீன்ஸ் கிலோ 150; அவரை 120

காஞ்சிபுரம்:தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் விளையும் காய்கறிகள் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து காஞ்சிபுரத்திற்கு வரவழைக்கப்படுகிறது. காஞ்சிபுரம் சந்தைகளில் கடந்த மாதம் பெரும்பாலான காய்கறிகள் குறைந்தபட்சம் கிலோ 20 ரூபாய் முதல், அதிகபட்சமாக 80 ரூபாய் வரை விற்கப்பட்டது.இந்நிலையில், காய்கறிகள் விளைச்சல் பாதிக்கப்பட்டு வெளிமாநிலங்களில் வரத்து குறைந்துள்ளதால், கிலோ 50 ரூபாய் முதல் அதிகபட்சம் 150 ரூபாய் வரை விற்கப்படுகிறது.இதனால், கடந்த மாதம் காய்கறிகளின் விலை குறைவாக இருந்ததால், கிலோ கணக்கில், பை நிறைய காய்கறியை வாங்கிச் சென்ற பொதுமக்கள், தற்போது விலை உயர்வால், கிராம் கணக்கில் வாங்கிச் செல்கின்றனர்.இதுகுறித்து காஞ்சிபுரம் ஓரிக்கை தற்காலிக ராஜாஜி சந்தையைச் சேர்ந்த காய்கறி வியாபாரி ஜி.குரு கூறியதாவது:அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் முடிந்தும் வெயில் அதிகரிப்பு காரணமாகவும், சமீபத்தில் பெய்த கோடை மழை காரணமாகவும் ஆந்திரா, கர்நாடகா மாநிலத்திலும், தமிழகத்தில் சில மாவட்டங்களிலும் சாகுபடி செய்திருந்த காய்கறிகள் விளைச்சல் பாதிக்கப்பட்டது.இதனால், காய்கறிகள் வரத்து குறைந்துள்ளதால், விலை உயர்ந்துள்ளது. இதனால், அதிகபட்சமாக கிலோ பீன்ஸ் 150 ரூபாய்க்கும், அவரை 120, முருங்கை 120 ரூபாய்க்கும், குறைந்த பட்சமாக காஞ்சிபுரம் சுற்றியுள்ள பகுதிகளில் விளையும் புடலங்காய் கிலோ 40, வெண்டை 45, கத்தரிக்காய் 50 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வரும் 20ம் தேதிக்குப் பின் காய்கறிகள் வரத்து அதிகரித்தால், விலை குறையும் வாய்ப்பு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

காய்கறிகள் கிலோ ரூ.

பீன்ஸ் 150அவரைக்காய் 120முருங்கைக்காய் 120சாம்பார் வெங்காயம் 90கருணைக்கிழங்கு 90தக்காளி 60கேரட் 60வெங்காயம் 60உருளைக்கிழங்கு 60பீட்ரூட் 50கத்தரிக்காய் 50மாங்காய் 50கோஸ் 50புடலங்காய் 40வெண்டைக்காய் 45


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை