ஸ்ரீபெரும்புதுாரில் ரூ. 1.10 கோடி நலதிட்ட உதவிகள் வழங்கல்
ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் வட்டர வளர்ச்சி அலுவலகத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான நலதிட்ட வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்து. காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தலைமை வகித்தார். சிறு குறு நடுத்தர தொழில் துறை அமைச்சர் அன்பரசன் முன்னிலை வகித்தார்.நிகழ்ச்சியில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 60 பயனாளிகளுக்கு 53.15 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில், ஸ்ரீபெரும்புதுார், குன்றத்துார் ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த 75 பயனாளிகளுக்கு 56.59 லட்சம் ரூபாய் மதிப்பிலான தாலிக்கு தங்கம் மற்றும் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் அன்பரசன் வழங்கினார்.நிகழ்ச்சியில், ஸ்ரீபெரும்புதுார் காங்., --- எம்.எல்.ஏ., செல்வப்பெருந்தகை, ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியக் குழுத்தலைவர் கருணாநிதி, ஸ்ரீபெரும்புதுார் நகரமன்ற தலைவர் சாந்தி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மலர்விழி, மாவட்ட சமூக நல அலுவலர் சியாமளா பங்கேற்றனர்.