உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மின்விளக்கு வசதியின்றி வெள்ளைகேட் மேம்பாலம்

மின்விளக்கு வசதியின்றி வெள்ளைகேட் மேம்பாலம்

காஞ்சிபுரம்:சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைத் துறை கட்டுப்பாட்டில், தங்க நாற்கர சாலை உள்ளது. இந்த நான்குவழிச் சாலையை, 654 கோடி ரூபாய் செலவில், ஆறுவழிச் சாலையாகவும், 18 இடங்களில் சிறு பாலங்கள் மற்றும் மூன்று இடங்களில் மேம்பாலங்கள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.இதில், வெள்ளைகேட் மேம்பாலத்தின் இருபுறமும், கடந்த பிப்ரவரி மாதம் மின்விளக்குகள் பொருத்தினர். ஆனால், வெள்ளைகேட் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் மின் விளக்கு பொருத்தவில்லை.குறிப்பாக, காஞ்சிபுரம் - அரக்கோணம் சாலையில், வெள்ளைகேட் பேருந்து நிறுத்தத்தில், ஏராளமான மக்கள் இருளில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.மேலும், அரக்கோணம் - செங்கல்பட்டு இடையே, ரயில் கடவுப்பாதையை கடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.எனவே, தேசிய நெடுஞ்சாலைத் துறையினர், வெள்ளைகேட் மேம்பாலத்திற்கு கீழ் மின் விளக்கு அமைக்கும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும் என, கோரிக்கை எழுந்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ