உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ஆபத்தான சாலை வளைவுகளில் வேகத்தடை அமைக்கப்படுமா?

ஆபத்தான சாலை வளைவுகளில் வேகத்தடை அமைக்கப்படுமா?

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், இளநகர் கிராமத்தில் பெருநகர் - கலியாம்பூண்டி செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையை பயன்படுத்தி அப்பகுதி மக்கள் உத்திரமேரூர், காஞ்சிபுரம், வந்தவாசி ஆகிய பகுதிகளுக்கு தினமும் சென்று வருகின்றனர். இந்நிலையில், இளநகர் கிராமத்தின் குடியிருப்பு பகுதிகளில் செல்லும், இச்சாலையில் மூன்று இடங்களில் ஆபத்தான சாலை வளைவுகள் உள்ளன.இங்கு, போக்குவரத்து எச்சரிக்கை குறியீடு பலகை, வேகத்தடை ஆகியவை இல்லாமல் உள்ளது. இதனால், வேகமாக செல்லும் வாகனங்கள் சாலை வளைவுகளில், எதிரே வரும் வாகனத்தோடு மோதி அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றன.இப்பகுதியில் வேகத்தடை மற்றும் போக்குவரத்து எச்சரிக்கை குறியீடு பதாகை அமைக்க, நீண்ட நாட்களாக கோரிக்கை இருந்து வருகிறது. ஆனால், துறை அதிகாரிகள் கண்டும் காணாததுபோல் இருந்து வருகின்றனர். எனவே, இளநகர் கிராமத்தில் உள்ள ஆபத்தான சாலைவளைவுகளில் வேகத்தடை அமைக்க, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !