உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

உத்திரமேரூர்:பீஹார் மாநிலம், யோகா மாவட்டம், பகவாசிவான பகுதியைச் சேர்ந்தவர் சங்கீத்குமார், 32; இவர், உத்திரமேரூர் அடுத்த, பெருநகரில் தங்கி, மேல்பாக்கத்தில் உள்ள தனியார் கம்பெனியில் வெல்டராக பணியாற்றி வந்தார்.நேற்று முன்தினம் வெல்டிங் வேலை செய்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து மயக்கமுற்றார். அவரை சக தொழிலாளர்கள் மற்றும் கம்பெனி நிர்வாகத்தினர், உத்திரமேரூர் அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சங்கீத்குமாரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர். இதுகுறித்து சங்கீத்குமார் மனைவி மஞ்சுகுமாரி அளித்த புகாரின்படி, பெருநகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை