உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  ‛டாடா எஸ் வாகனத்தில் மாடு திருடிய வாலிபர் கைது

 ‛டாடா எஸ் வாகனத்தில் மாடு திருடிய வாலிபர் கைது

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் அருகே, ஒரகடம் அடுத்த உமயாள்பரணச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் வாசு, 46, விவசாயி. இவர், சொந்தமாக 5 பசு மாடுகளை வைத்து வளர்த்து வருகிறார். நேற்று காலை உமயாள்பரணச்சேரி கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் மேய்ந்துக்கொண்டிருந்த மாடு ஒன்றை, டாடா ஏஸ் வாகனத்தில் சிலர் திருடி சென்றனர்.இது குறித்த புகாரின் படி, வடக்குப்பட்டு அம்பேத்கர் தெருவை சேர்ந்த சந்திப் குமார், 26, என்பரை ஒரகடம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை