உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ஆடு திருடிய வாலிபர் கைது

ஆடு திருடிய வாலிபர் கைது

வாலாஜாபாத்:வாலாஜாபாத் ஒன்றியம், ஊத்துக்காட்டில் அறுவடையான விவசாய நிலப் பகுதியில் கால்நடை விவசாயிகள் நேற்று ஆடு மேய்ச்சலில் ஈடுபட்டு இருந்தனர்.அப்போது, மதியம் 1:00 மணிக்கு மேய்ச்சலில் இருந்த ஆடுகள் அலறி ஓடுவதைக் கண்ட கால்நடை பராமரிப்போர், அருகில் சென்று பார்த்தனர். அப்போது,ஆடுகளை பிடிக்க முயன்ற வாலிபர் ஒருவரை விரட்டிப் பிடித்து வாலாஜாபாத் போலீசில் ஒப்படைத்தனர்.விசாரணையில் அந்த வாலிபர் வட மாநிலத்தைச் சேர்ந்த ரெஜின், 21, என்பது தெரிய வந்தது. இவர், அதே பகுதியில் வாடகை வீடு ஒன்றில் தங்கி கட்டட வேலை பார்த்து வருவதும் விசாரணையில் தெரிந்தது. வடமாநில வாலிபரை கைது செய்து வாலாஜாபாத் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்