காஞ்சிபுரம்:பரந்துார் விமான நிலைய திட்டத்தில், நில எடுப்பு செய்யும் பணி தீவிரமடைந்துளள் நிலையில், 10 தாசில்தார்களை நியமித்து, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதில், ராணிப்பேட்டை, சென்னையிலிருந்து ஐந்து தாசில்தார்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.சென்னையின் இரண்டாவது விமான நிலையம், காஞ்சிபுரம் மாவட்டம், பரந்துார் சுற்றுவட்டார பகுதியில் உள்ள, 20 கிராமங்களில், 5,700 ஏக்கர் பரப்பளவில் அமையஉள்ளது. அரசாணை வெளியீடு
காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதுார் ஆகிய இரு தாலுகாவிலும், இதில், 3,700 ஏக்கர் நிலம் விவசாயிகள், கிராம மக்களிடம் இருந்து நில எடுப்பு செய்யப்பட உள்ளது. மீதமுள்ள, 2,000 ஏக்கர் நீர்நிலையாகவும், அரசு நிலமாகவும் உள்ளது.இத்திட்டத்திற்கான அறிவிப்பு, 2022ல் வெளியானது முதலே, ஏகனாபுரம் கிராமத்தினர் தொடர்ந்து பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.கிராம மக்களின் எதிர்ப்பு போராட்டம் நடக்கும் நிலையில், கடந்தாண்டு அக்டோபர் இறுதியில், விமான நிலைய திட்டத்துக்கான நிர்வாக அனுமதிவழங்கி அரசாணை வெளியிட்டது.இத்திட்டத்திற்கு, மூன்று மாவட்ட வருவாய் அலுவலர்கள் தலைமையில், மூன்று துணை கலெக்டர்கள், 29 தாசில்தார்கள், 6 துணை தாசில்தார்கள், சர்வேயர்கள், தட்டச்சர்கள் என, 300 பேர் பணியாற்ற உள்ளனர்.ஏற்கனவே, ஒரு மாவட்ட வருவாய் அலுவலர், ஒரு துணை கலெக்டர் நியமிக்கப்பட்ட நிலையில், நில எடுப்பு தாசில்தார்களை நியமனம் செய்யும் பணிகளை காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. நெருக்கடி
சில நாட்களுக்கு முன்னதாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில் பணியாற்றும் தாசில்தார்கள் 5 பேரை, விமான நிலைய திட்டத்திற்கு கலெக்டர் கலைச்செல்வி நியமித்து உத்தரவிட்டிருந்தார்.அதன்படி, ஐந்து தாசில்தார்களும் நேற்று முன்தினம் நியமித்து, கலெக்டர் கலைச்செல்வி உத்தரவிட்டுள்ளார்.அடுத்தபடியாக, துணை தாசில்தார்கள், சர்வேயர்கள், தட்டச்சர்கள் போன்ற கீழ்நிலை பணியாளர்கள் நியமிக்கும் பணிகள் நடைபெற உள்ளது.அதுமுதல், நில எடுப்புக்கான பொது அறிவிப்பு வெளியிடுவதும், நோட்டீஸ் அனுப்புவது, களப்பணி செய்வது போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும் என வருவாய்த்துறையினர் தெரிவிக்கின்றனர்.காஞ்சிபுரம் மாவட்ட வருவாய்த் துறையினர் கூறியதாவது:விமான நிலைய திட்டத்துக்கான பணியாளர்கள்நியமனம் செய்யும் பணிகள் தீவிரமாக நடக்கிறது. பணியாளர்களை நியமிக்கவும் தொழில்துறையிலிருந்து நெருக்கடி வருகிறது.இதனால், நில எடுப்பு பணிக்கு அதிகாரிகள், ஊழியர்கள் நியமித்து வருகின்றனர். பணியாளர்கள் பெரும்பாலும் நியமிக்கப்பட்டவுடன், நாளிதழ்களில் பொது அறிவிப்பு வெளியிடப்படும். அதைத் தொடர்ந்து, மாவட்ட அரசிதழிலும் அறிவிப்பு வெளியிடப்படும். களப்பணி
அதைத் தொடர்ந்து, எந்தெந்த சர்வே எண்கள் நில எடுப்பு செய்ய வேண்டுமோ அந்த இடங்களுக்கு நேரில் சென்று களப்பணி செய்து, நில எடுப்புக்கான பணிகள் மேற்கொள்ளப்படும்.வெளி மாவட்டத்திலிருந்து ஐந்து தாசில்தார்கள் நியமிக்க வேண்டிய கட்டாயம் இப்போது ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில், 50 தாசில்தார்கள் உள்ளனர். ஆனால், இத்திட்டத்திற்கு தேவையான போதிய தாசில்தார்கள் இல்லாததால், வெளிமாவட்ட தாசில்தார்கள் தேவைப்படுகின்றனர்.ஏற்கனவே, மூன்று தாசில்தார்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில் உள்ளனர். மேலும், நான்கு தாசில்தார்கள் பதவி உயர்வில் சென்றுவிட்டனர். இதனால், வெளிமாவட்ட தாசில்தார்களை கடனாக பெற வேண்டியுள்ளது.இவ்வாறு வருவாய் துறையினர் கூறினர்.
10 தாசில்தார்கள் பரந்துார் விமான நிலைய நில எடுப்பு திட்டத்தில் பணியமர்த்தப்பட்ட விபரம்
ஏற்கனவே இருந்த பதவியிடம் நில எடுப்புக்காக நியமிக்கப்பட்டுள்ள புதிய பதவியிடம்ராஜேஷ், ராணிப்பேட்டை மாவட்டம் பரந்துார் விமான நிலைய திட்டம்ஷமீம், ராணிப்பேட்டை மாவட்டம் பரந்துார் விமான நிலைய திட்டம்பழனிராஜன, ராணிப்பேட்டை மாவட்டம் பரந்துார் விமான நிலைய திட்டம்மாதவன், சென்னை மாவட்டம் பரந்துார் விமான நிலைய திட்டம்வரதராஜன், சென்னை மாவட்டம் பரந்துார் விமான நிலைய திட்டம்ஜெயகாந்தன், பெங்களூரு விரைவு சாலை திட்டம் பரந்துார் விமான நிலைய திட்டம்லோகநாதன், ஸ்ரீபெரும்புதுார் சிப்காட் பரந்துார் விமான நிலைய திட்டம்மாதவன், வல்லம் சிப்காட் பரந்துார் விமான நிலைய திட்டம்பிரகாஷ், ஒரகடம் சிப்காட் பரந்துார் விமான நிலைய திட்டம்ரமணி, சமூக பாதுகாப்பு திட்டம் பரந்துார் விமான நிலைய திட்டம்