உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ஆயிரம்விளக்கு அதிகாரி வீட்டில் 100 சவரன் திருட்டு

ஆயிரம்விளக்கு அதிகாரி வீட்டில் 100 சவரன் திருட்டு

சென்னை, ஆயிரம்விளக்கு, ரங்கூன் தெருவைச் சேர்ந்தவர் சூசைராஜ், 58; தனியார் நிறுவன மேலாளர். இவரது மனைவி ஜூலி. இவர், பெரம்பூரில் உள்ள அரசு லுார்து மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.கடந்த 3ம் தேதி, திருச்சியில் நடந்த திருமணத்திற்கு சூசைராஜ் மட்டும் சென்றார்.இந்த நிலையில், நேற்று காலை அவரது மனைவி, பள்ளியில் நடைபெறும் விழாவிற்கு நகை அணிந்து செல்லலாம் என, பீரோவை திறந்து பார்த்தார்.அப்போது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த, 100 சவரன் நகை மாயமானது தெரியவந்தது. இது குறித்து சூசைராஜ் ஆயிரம்விளக்கு போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை வைத்து விசாரித்து வருகின்றனர். பொதுவாக, குடும்பத்துடன் சூசைராஜ் வெளியே செல்லும்போது, வீட்டை பூட்டி பக்கத்து வீட்டில் உள்ளவர்களிடம் சாவியை கொடுத்து செல்வது வழக்கம்.தற்போது, பூட்டு ஏதும் உடைக்கப்படாமல் நகை மட்டும் மாயமாகி உள்ளதால், பக்கத்து வீட்டில் வசிப்போரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை