உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் ஓராண்டில் 10,000 டயாலிசிஸ் சிகிச்சை

 காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் ஓராண்டில் 10,000 டயாலிசிஸ் சிகிச்சை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனையில் நடப்பு ஆண்டில், 10,006 டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது என, மருத்துவ மனை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்தி குறிப்பு: காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனையில் டயாலிசிஸ் எனப்படும் சிறுநீரக ரத்த சுத்திகரிப்பு பிரிவு கடந்த 10 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. சிறுநீரக ரத்த சுத்திகரிப்பு சிகிச்சையின் மூலம் பல்வேறு மருத்துவ பயனாளர்கள் பயனடைந்து வருகின்றனர். கடந்த ஜனவரி முதல் டிசம்பர் 18 ம் தேதி வரை 10,006 சிறுநீரக ரத்த சுத்தி கரிப்பு சுழற்சி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. பயனாளர்கள் 106 பேர் பயனடைந்துள்ளனர். இதில், பெரும்பாலான பயனாளர்கள் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயனடைந்துள்ளனர். தற்போது, 14 டயாலிசிஸ் இயந்திரங்கள் பயன் பாட்டில் உள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை