மேலும் செய்திகள்
ஆடி வெள்ளி: கோயில்களில் குவிந்த பக்தர்கள்
19-Jul-2025
குன்றத்துார்:ஆடி பூரத்தை முன்னிட்டு, மாங்காடு காமாட்சி அம்மனுக்கு 1,008 கலச அபிஷேகம் இன்று நடைபெறுகிறது. குன்றத்துார் அடுத்த மாங்காடில், பிரசித்தி பெற்ற காமாட்சி அம்மன் கோவில் உள்ளது. இங்கு அம்மனின் திருநட்சத்திரமான பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு, ஆண்டுதோறும் அம்மனுக்கு 1,008 கலச அபிஷேகம் நடப்பது வழக்கம். இந்தாண்டு கலச அபிஷேகம் நேற்று முன்தினம் துவங்கியது. 1,008 கலசங்கள் வைத்து முதல் கால பூஜைகள் துவங்கின. நேற்று இரண்டாம் மற்றும் மூன்றாம் கால பூஜைகள் நடந்தன. இன்று காலை 6:00 மணிக்கு நான்காம் கால பூஜை செய்து காமாட்சி அம்மனுக்கு 1,008 கலசங்களில் இருந்து புனித நீர் ஊற்றி அபிஷேகம் செய்யப்பட உள்ளது.
19-Jul-2025