உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ஒரே தெருவில் 13 வேகத்தடைகள் வாகனங்கள் செல்வதில் சிக்கல்

ஒரே தெருவில் 13 வேகத்தடைகள் வாகனங்கள் செல்வதில் சிக்கல்

காஞ்சிபுரம்,காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள பல சாலைகள் அகலமாகவும், நீளமா கவும் இருப்பதால், வாகன ஓட்டிகள் பலரும் வேகமாகவும், விபத்து ஏற்படுத்தும் வகையில் விதிமீறியும் வாகனங்களை இயக்குகின்றனர்.இதனால், பல இடங்களில் அப்பகுதியினரே கான்கிரீட்டால் வேகத்தடை அமைக்கின்றனர். அவ்வாறு, சின்ன காஞ்சிபுரம் பகுதியில் உள்ள மலையாள தெருவில் அப்பகுதியினர் அமைத்துள்ள வேகத்தடையால் விபத்து ஏற்படும் சூழல் உருவாகிஉள்ளது.வாகனங்கள் வேகமாக செல்வதால் அமைக்கப்பட்ட வேகத்தடை காரணமாகவே விபத்து ஏற்படும் சூழல் உருவாகியிருப்பதாக பலரும் புகார் தெரிவிக்கின்றனர்.ஒரே தெருவில்,அடுத்தடுத்து 13 வேகத்தடைகள் கான்கிரீட்டால் அமைத்துள்ளனர். சாலையின் இருபுறம் முழுமையான அளவுக்கு சில வேகத்தடையும், பாதி அளவுக்கு சில வேகத்தடையும் அடுத்தடுத்து அமைத்துள்ளனர்.வேகத்தடை உயரமாகவும், வண்ணம் தீட்டாமலும் இருப்பதால், டூ - வீலர், ஆம்புலன்ஸ், ஆட்டோ போன்ற வாகனங்கள் இயக்குவதில் சிரமம் ஏற்படுகிறது.விபத்தை குறைக்க அமைக்கப்படும் வேகத்தடையே விபத்துக்கு காரணமாக அமையும் என்பதால், மாநகராட்சி நிர்வாகம் இந்த வேகத்தடைகளை அகற்ற வேண்டும் என, நகரவாசிகளும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுக்கின்றனர்.ஒரே தெருவில், 13 வேகத்தடை அமைத்திருப்பதை மாநகராட்சி அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, அவற்றை அகற்ற வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ