உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வடமதுரை அருகே வெறி நாய் கடித்து 7 பெண்கள் உட்பட 16 பேர் காயம்

வடமதுரை அருகே வெறி நாய் கடித்து 7 பெண்கள் உட்பட 16 பேர் காயம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே வெறிநாய் கடித்து 7 பெண்கள், சிறுவன் உட்பட 16 பேர் காயமடைந்து திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தெரு நாய்களை கட்டுப்படுத்த அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். வடமதுரை அருகே காணப்பாடி தாதநாயக்கன்பட்டி பகுதியில் ஏராளமான தெரு நாய்கள் சுற்றித் திரிகின்றன. இதில் நேற்று ஒன்று வெறி பிடித்து அப்பகுதியில் உள்ள கால்நடைகளை அச்சுறுத்தி அங்கும் இங்குமாக சுற்றி திரிந்தது. அப்போது காணப்பாடியை சேர்ந்த மோகன், என்பவரது மாட்டை வெறி நாய் கடித்தது. அதை தடுக்க முயன்ற மோகனையும் அந்த நாய் கடித்து அங்கிருந்து தப்பியது. தொடர்ந்து ஊர்க்காரர்கள் வெறி நாயை பிடிக்க முயன்றனர். இதை தெரியாத காணப்பாடி, தாதநாயக்கன்பட்டியைச் சேர்ந்த மக்கள் சிலர் தோட்டத்து வேலைக்கு சென்று வீடு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த வெறிநாய் 7 பெண்கள், சிறுவன் உட்பட 16 பேரை கை,கால்,வயிறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடித்து குதறியது. தொடர்ந்து நாயிடமிருந்து தப்பிக்க அப்பகுதி மக்கள் வீடுகளுக்கு புகுந்து கதவை அடைத்துக் கொண்டனர். வெறி நாய் கடித்து காயமடைந்த 16 பேரும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அதில் ஒரு பெண் மட்டும் அதிக கடிபட்டதால் அவரை மேல் சிகிச்சைக்காக மதுரைக்கு டாக்டர்கள் அனுப்பினர். தொடர்ந்து வடமதுரை அருகே உள்ள காணப்பாடி, தாதநாயக்கன்பட்டி பகுதியில் சுற்றித் திரியும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும். இதனால் அப்பகுதி மக்கள் வெளியில் நடமாட முடியாமல் தொடர்ந்து அச்சத்தில் உள்ளனர். மாவட்ட நிர்வாகம் இதன் மீது கவனம் செலுத்தி தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை