உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / குழந்தை திருமணம் நடத்தியர்கள் மீது 19 வழக்கு பதிவு

குழந்தை திருமணம் நடத்தியர்கள் மீது 19 வழக்கு பதிவு

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், குழந்தை திருமணங்களை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குழந்தை திருமணம் நடப்பதாக, இந்தாண்டு கிடைத்த 19 புகார்களில், 15 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. 4 திருமணங்கள் நடந்து முடிந்தது தெரியவந்துள்ளன.புகார் பெறப்பட்ட 19 குழந்தை திருமணங்கள் பற்றியும், போலீசில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே பொதுமக்களுக்கு குழந்தை திருமணம் நடப்பது தெரிய வந்தால் குழந்தைகளுக்கான உதவி எண் 1098, மகளிர் உதவி எண் 181, மற்றும் மாவட்ட சமூக நல அலுவலகத்தை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.குழந்தை திருமணம் என்று தெரிந்தும், ஆதரிப்பவர்கள், நடத்துபவர்களுக்கும் 2 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், 1 லட்சம் அபராதமும் விதிக்கப்படும். புகார்தாரர் பற்றி ரகசியம் காக்கப்படும் என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ