உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / விவசாயிகளுக்கு ரூ.21 லட்சம் கடனுதவி

விவசாயிகளுக்கு ரூ.21 லட்சம் கடனுதவி

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்ப பள்ளிகளை கலெக்டர் கலைச்செல்வி நேற்று பார்வையிட்டு, மாணவர்களின் கற்றல் திறன் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து, பள்ளியை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக்கொள்ள ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தினார். இதையடுத்து, கீழ்கதிர்பூர் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்திற்கு சென்று, வரவு - செலவு, கடன் தொகை வழங்கப்பட்ட ஆவணங்களையும், பாதுகாப்பு அறையையும் பார்வையிட்டு ஆய்வு செய்து, 21 லட்சம் ரூபாய் மதிப்பில் விவசாயிகளுக்கு, மாற்றுத்திறனாளிகள் மற்றும் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவிகளை வழங்கினார். இதையடுத்து, தாமல் கிராமத்தில் கால்நடை மருந்தகத்திலும் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் கலைச்செல்வி, சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை