மேலும் செய்திகள்
குட்கா விற்ற 10 கடைகளுக்கு 'சீல்'
13-Nov-2024
சோஷியல் மீடியாவில் கட்டுப்பாடுகள் தேவை!
08-Nov-2024
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் நகரில் உள்ள கடைகளில் பயன்படுத்தும் எடை இயந்திரங்கள், தொழிலாளர் நலத்துறை வாயிலாக, முத்திரையிடப்படாமல் பயன்படுத்துவதாகவும், பல கடைகளில் மின்னணு இயந்திரத்தில் வியாபாரிகள் தில்லுமுல்லு செய்வதாக, வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டத்தில் புகார்கள் வந்துள்ளன.இதனால், தொழிலாளர் நலத்துறை உதவி கமிஷனர் சுதா தலைமையில், தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் கொண்ட குழுவினர், காஞ்சிபுரத்தில் உள்ள கடைகளில் நேற்று திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.பூக்கடைச்சத்திரம் பூ கடைகளிலும், தர்கா இறைச்சி கடைகளிலும், பொன்னேரிக்கரை மேம்பாலம் அருகேயுள்ள மீன் சந்தையிலும், சாலையோர வியாபாரிகளிடமும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.வியாபாரத்துக்கு பயன்படுத்தும் எடை இயந்திரங்கள் முறையாக முத்திரையிடப்பட்டுள்ளனவா என சோதனையிட்டதில், பல கடைகளில் அவ்வாறு முறையான எடை இயந்திரம் பயன்படுத்தாதது தெரியவந்தது.இதனால், 24 மின்னணு எடை இயந்திரங்களை பறிமுதல் செய்தனர். 50 கடைகளுக்கு மேலாக ஆய்வு நடத்தியதில், பல கடைகளில் இந்த விதிமீறல் நடப்பது தெரியவந்தது.அதிகபட்சமாக, 5,000 ரூபாய் அபராதம் விதிக்க, உதவி கமிஷனர் சுதா உத்தரவிட்டார். சாலையோர கடைகளில் பயன்படுத்திய எடை கல் போன்றவற்றிலும் முத்திரை இல்லாதது தெரியவந்தது. இதனால், அவற்றையும் பல கடைகளில், அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
13-Nov-2024
08-Nov-2024