குரூப் - 2 தேர்வில் 2,622 பேர் ஆப்சென்ட்
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், டி.என்.பி.எஸ்.சி., குரூப் - -2 தேர்வில், 2,622 பேர், தேர்வு எழுத வரவில்லை என, தெரிய வந்துள்ளது. தமிழகம் முழுதும் நேற்று, டி.என்.பி.எஸ்.சி., குரூப் - -2 தேர்வு நடந்தது. அதன்படி, காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர் ஆகிய தாலுகாக்களில், 41 தேர்வு அறைகளில், 12,618 பேர் தேர்வு எழுத இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது. இதில், 9,996 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். மீதம், 2,622 பேர் தேர்வு எழுத வரவில்லை என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்து உள்ளது.