உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / இடைநின்ற 3 மாணவியர் மீண்டும் பள்ளியில் சேர்ப்பு

இடைநின்ற 3 மாணவியர் மீண்டும் பள்ளியில் சேர்ப்பு

காஞ்சிபுரம்:வாலாஜாபாத் ஒன்றியம், ஊத்துக்காடு இருளர் குடியிருப்பில் பள்ளி இடைநின்ற மற்றும் பள்ளி செல்லா குழந்தைகள் குறித்து கணக்கெடுப்பு நடத்த, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி உத்தரவிட்டு இருந்தார்.அதன்படி, ஊத்துக்காடு, காந்தி நகர் குடியிருப்பில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வித் துறையினர் கணக்கெடுப்பு நடத்தினர். இதில், பள்ளி இடைநின்ற மூன்று மாணவியர் கண்டறியப்பட்டனர்.இதையடுத்து, இடை நின்ற மூன்று மாணவியும், முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி வழிகாட்டுதலின்படி, ஊத்துக்காடு அரசு உயர்நிலைப் பள்ளியில் நேற்று சேர்க்கப்பட்டனர்.அதை தொடர்ந்து பள்ளி தலைமை ஆசிரியர் குணசேகரன், ஆசிரியர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திருப்பதி மற்றும் ஆசிரியர் பயிற்றுனர்கள் அருணா, கோவிந்தம்மாள் உள்ளிட்ட குழுவினர் காந்தி நகர் குடியிருப்பில் வீடு வீடாக சென்று பெற்றோருக்கு கல்வியின் அவசியம் குறித்தும், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை