3.81 லட்சம் குழந்தைகளுக்கு குடற்புழு மாத்திரை வழங்கல்
காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாவட்டத்தில், பிப்., 10ல், தேசிய குடற்புழு நீக்க நாள் செயல்படுத்தப்பட உள்ளதாக, மாவட்ட நிர்வாகம் கடந்த வாரம் அறிவிப்பு வெளியிட்டது.அதன்படி, 1 முதல் 19 வயது வரையுள்ள, 3.81 லட்சம் குழந்தைகள் மற்றும் மாணவர்களுக்கு, 'அல்பென்டசோல்' மாத்திரை வழங்கப்பட்டது. அதேபோல், 20 முதல் 30 வயதுள்ள, 83,000 பெண்களுக்கும் இந்த மாத்திரை வழங்கும் பணி துவங்கியுள்ளது.மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், பள்ளி - கல்லுாரிகள் என, அனைத்து இடங்களிலும், சுகாதார பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் கல்வித்துறை பணியாளர்கள் வாயிலாக, குடற்புழு மாத்திரை நேற்று வழங்கப்பட்டது.விடுபட்டோருக்கு, பிப்., 17ல் வழங்கப்படும் என, கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.