| ADDED : டிச 31, 2025 03:43 AM
திருப்போரூர்: திருப்போரூர் அடுத்த மேலக்கோட்டையூர், படவட்டம்மன் கோவில் தெருவில் வசிப்பவர் பாலகணேஷ், 35; தனியார் நிறுவனத்தில் வணிக அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இவர், கடந்த 25ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு, உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சிக்காக கேரளா சென்றுள்ளார்.விழா முடிந்து, நேற்று முன்தினம் இரவு 9:00 மணியளவில், பாலகணேஷ் வீடு திரும்பினார். அப்போது, வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. அவர் உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் வைத்திருந்த 4.5 சவரன் தங்க நகை, 200 கிராம் வெள்ளி பொருட்கள் திருடு போனது தெரிந்தது. இதுகுறித்த புகார்படி தாழம்பூர் போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.