உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  உடல் உறுப்பு தானத்திற்கு காஞ்சியில் 53 பேர் பதிவு

 உடல் உறுப்பு தானத்திற்கு காஞ்சியில் 53 பேர் பதிவு

காஞ்சிபுரம்: இந்திய மருத்துவ சங்கம் காஞ்சிபுரம் கிளை, இறை துளிகள் இயக்கம், தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கம், காஞ்சிபுரம் ரோட்டரி சங்கம் சார்பில் காஞ்சிபுரத்தில் நடந்த ரத்ததான முகாமில், 53 பேர் உடல் உறுப்பு தானம் செய்ய பதிவு செய்துள்ளனர். காஞ்சிபுரம் அடுத்த காரப்பேட்டையில் உள்ள அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனையில் நடந்த இந்நிகழ்ச்சியை சங்க தலைவர் தன்யகுமார் துவக்கி வைத்து, ரத்ததானம் மற்றும் உடல் உறுப்பு தானம் குறித்து பேசி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். சங்க செயலர் முத்துகுமரன், நிலைய மருத்துவ அதிகாரி சிவகாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரத்த வங்கி அதிகாரி பாஸ்கோ பிரேம்குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் ரத்ததானம் செய்ய வந்தோருக்கு முதற்கட்ட பரிசோதனை மேற்கொண்டனர். இம்முகாமில், மருத்துவர் பார்த்தசாரதி, காஞ்சியில் இலவச அரசு பணித்தேர்வு பயிற்சி வகுப்பு நடத்திவரும் எழிலன் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் செய்தனர். மருத்துவர் புஷ்பம், சங்க செயலர் மருத்துவர் முத்துக்குமரன் உள்ளிட்ட தன்னார்வலர்கள் 53 பேர் உடல் உறுப்பு தானம் செய்வதற்காக பதிவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை