உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / இந்த ஆண்டிற்குள் 680 பேர் ஓய்வு எம்.டி.சி.,யில் ஆள்பற்றாக்குறை

இந்த ஆண்டிற்குள் 680 பேர் ஓய்வு எம்.டி.சி.,யில் ஆள்பற்றாக்குறை

சென்னை, சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் ஓட்டுனர், நடத்துநர்கள் உட்பட 680 பேர் இந்த ஆண்டு இறுதிக்குள் ஓய்வு பெறுகின்றனர்.சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில், 672 வழித்தடங்களில் 3,000க்கும் மேற்பட்ட பஸ்கள் தினமும் இயக்கப்படுகின்றன. அனைத்து பேருந்துகளையும் இயக்க, போதிய ஓட்டுநர்கள், நடத்துநர்கள் இல்லாத நிலையில், 500க்கும் மேற்பட்ட பேருந்துகள் பணிமனையில் நிறுத்தப்பட்டன. போதிய பேருந்துகள் இயக்காத நிலையில், பயணி யரும் அவதிப்பட்டனர்.இதற்கிடையே, பணிமனைக்கு வரும் பேருந்துகளுக்கு டீசல் நிரப்புதல் உள்ளிட்ட பணியில் இருந்த ஓட்டுநர்களை, வழித்தடத்தில் இயங்கும் பேருந்துகளில் பணியமர்த்த, மாநகர போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுத்தது. தற்காலிக பணியாளர்களை கொண்டு பேருந்துகளை தடையின்றி இயக்க நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வந்தாலும், ஆட்கள் பற்றாக்குறை பிரச்னை தீரவில்லை. தமிழக விரைவு போக்குவரத்து கழகத்தை தவிர, எந்த போக்குவரத்து கழகத்திலும், கடந்த 11 ஆண்டுகளுக்கு மேலாக, நிரந்தர பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை. மாநகர போக்குவரத்து கழகத்தில், 2015ல் பணியில் 25,219 பேர் இருந்தனர். தற்போது, 19,415 பேர் பணியில் இருக்கின்றனர். இதற்கிடையே, இந்த ஆண்டு இறுதிக்குள் 258 ஓட்டுநர்கள், 253 நடத்துநர்கள் உட்பட 680 பேர் ஓய்வு பெற உள்ளதாக நிர்வாகம் கணக்கீடு செய்துள்ளது. எனவே, மாநகர போக்குவரத்து கழகத்தில் காலிபணியிடங்களில் நிரந்தர பணியாளர்களை நியமனம் செய்ய, நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, போக்குவரத்து தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை