உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  சாம்சங் தொழிலாளர்கள் 70 பேர் கைது

 சாம்சங் தொழிலாளர்கள் 70 பேர் கைது

ஸ்ரீபெரும்புதுார்: 'சாம்சங்' தொழிற்சாலையில், சஸ்பெண்ட் செய்யப்பட்ட, 27 தொழிலாளர்களுக்கு மீண்டும் பணி கோரி, காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் நோக்கி நடைபயணம் செல்ல முயன்ற, 70 சாம்சங் தொழிலாளர்களை, போலீசார் நேற்று கைது செய்தனர். காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரத்தில் உள்ள, 'சாம்சங்' தொழிற்சாலையில், தொழிலாளர்களின் ஒரு பகுதியினர், தொழிற்சங்க அங்கீகாரம் அளித்தல் உள்ளிட்ட, ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, 2024ம் ஆண்டு, செப்., 9ம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். பின், அரசு நடத்திய பேச்சில் உடன்பாடு ஏற்பட்டு பணிக்கு திரும்பினர். இதையடுத்து, தொழிலாளர்கள் படிப்படியாக பணிக்கு திரும்பினர். இந்த நிலையில், போராட்டத்தில் பங்கேற்ற தொழிலாளர்களிடம், தொழிற் சங்கத்தில் இருந்து விலகவும், தொழிற்சாலை நிர்வாகத்திற்கு ஆதரவாக செயல்படும் இண்டர்னல் கமிட்டியில் சேர, நிர்வாகத்தின் தரப்பில் அழுத்தம் கொடுப்பதாக கூறி, ஜன., 31ம் தேதி தொழிலாளர்கள் ஒன்றினைந்து தொழிற்சாலை நிர்வாக இயக்குநரை சந்திக்க அனுமதி கேட்டனர். அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தொழிற்சாலைக்குள் கூட்டத்தை கூட்டி, பதற்றமான சூழலை உருவாக்கியதாக கூறி, பிப்., 4ம் தேதி, தொழிற்சங்க நிர்வாகிகள் மூன்று பேர் உட்பட் 27 பேர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். இவர்களுக்கு, பணி வழங் கக்கோரி, நேற்று காலை, சுங்குவார்சத்திரம் நான்கு சாலை சந்திப்பில், சாம்சங் இந்தியா தொழிலாளர்கள் சங்க தலைவர் முத்துகுமார் தலைமையில், 70 தொழிலாளர்கள் ஒன்று கூடினர். இதையடுத்து, அங்கிருந்து நடைபயணம் மேற்கொள்ள முற்பட்ட போது, முன்னதாகவே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ருடிந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி, கைது செய்தனர். அவர்களை, ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள த னியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்து, மாலையில் விடுவிக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்