உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / அலுவலக உதவியாளர் பணி 5 பேருக்கு 734 பேர் போட்டி

அலுவலக உதவியாளர் பணி 5 பேருக்கு 734 பேர் போட்டி

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில், காலியாக உள்ள ஐந்து அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு, 734 பேர் விண்ணப்பித்து, போட்டியில் உள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில், காஞ்சிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், இரண்டு அலுவலக உதவியாளர்கள்; குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், வாலாஜாபாத் ஆகிய மூன்ற வட்டார வளர்ச்சி அலுவலகங்களில், தலா ஒரு அலுவலக உதவியாளர் என மொத்தம், ஐந்து அலுவலக உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு, விண்ணப்பங்கள் பெறப் பட்டுள்ளன. ஐந்து இடங்களுக்கு, 734 பேர் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பங்கள் பரிசீலனை நடந்து வருகிறது. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்த பின், நேர்காணல் தேதி அறிவிக்கப்படும் என, ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ