உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கொத்தனார் வீட்டில் 8 சவரன் நகை திருட்டு

கொத்தனார் வீட்டில் 8 சவரன் நகை திருட்டு

உத்திரமேரூர்:- புலிவாய் கிராமத்தில் கொத்தனார் வீட்டில் பீரோவை உடைத்து 8 சவரன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். உத்திரமேரூர் தாலுகா, புலிவாய் கிராமத்தில் ஈஸ்வரன் கோவில் தெருவில் வசித்து வருபவர் சேகர், 65; கொத்தனார். இவர் நேற்று முன்தினம் இரவு குடும்பத்தினருடன், வீட்டு வாசலில் படுத்து துாங்கியுள்ளார். அப்போது, வீட்டின் முன்பக்க வாசல் கதவை திறந்து வைத்து துாங்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, சேகர் நேற்று, காலை 6:00 மணிக்கு வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, பீரோ கதவு உடைக்கப்பட்டு இருந்தது. பின், அதிலிருந்த 8 சவரன் நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிந்தது. இது குறித்து புகாரின் பேரில் மாகரல் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை