உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பிரதான குழாயில் உடைப்பு குருவிமலையில் வீணாகும் குடிநீர்

பிரதான குழாயில் உடைப்பு குருவிமலையில் வீணாகும் குடிநீர்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம், குருவிமலை பாலாற்றங்கரையோரத்தில் ஆழ்துளை குழாய் அமைத்து விச்சந்தாங்கல், களக்காட்டூர், வேடல், காலுார் உள்ளிட்ட கிராமங்களுக்கு, காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலையோரம், நிலத்தடியில் புதைக்கப்பட்ட குழாய் வாயிலாக குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், குருவிமலைக்கும், விச்சந்தாங்கலுக்கும் இடையே நிலத்தடியில் புதைக்கப்பட்ட பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டு, ஒரு வாரமாக குடிநீர் வீணாக வெளியேறுகிறது. சம்பந்தப்பட்ட கிராமத்தில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உள்ளது.மேலும், நீண்டநேரம் மின்மோட்டார் இயங்குவதால் மின்மோட்டார் விரைவில் பழுதாகும் நிலை உள்ளதோடு, மின்சாரமும் விரயமாகிறது.குழாய் உடைப்பு ஏற்பட்ட பகுதியில், சாலையும் சேதமடைகிறது. எனவே, குடிநீர் குழாய் உடைப்பை சீரமைக்க சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை