உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பல்லாங்குழியான சாலை

பல்லாங்குழியான சாலை

ஸ்ரீபெரும்புதுார்:சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், சுங்குவார்சத்திரம் அடுத்த, பிள்ளைசத்திரத்தில் இருந்து, ஜம்போடை வழியாக, மேல்மதுரமங்கலம், கூத்தவாக்கம், சிவன்கூடல் உள்ளிட்ட பகுதிகளுக்கு நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.வாகன போக்குவரத்து அதிகம் உள்ள பிரதான சாலையில், ஜம்போடை பகுதியில் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறியுள்ளது. இதனால், இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.பல்லாங்குழியான சாலையில் ஆங்காங்கே மழைநீர் தேங்கி உள்ளதால், இருசக்கர வாகன ஓட்டிகள் அவதி அடைகின்றனர்.மேலும், இந்த சாலை வழியே செல்லும் வாகன ஓட்டிகள், இரவு நேரத்தில் செல்லும் போது, குண்டும் குழியுமான சாலையில் விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர்.எனவே, சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை