உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வாலாஜாபாத் பி.டி.ஓ., ஆபீசில் ஆதார் சேவை மையம் துவக்கம்

வாலாஜாபாத் பி.டி.ஓ., ஆபீசில் ஆதார் சேவை மையம் துவக்கம்

வாலாஜாபாத்: வாலாஜாபாத், பி.டி.ஓ., அலுவலகத்தில் நேற்று, ஆதார் சேவை மையம் துவக்கப்பட்டது. மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு திட்ட சேவைகளை, 'ஆன்லைன்' மூலமாக பெற, தமிழக மின்னாளுமை முகமை, தமிழக 'கேபிள் டிவி' நிறுவனம் ஆகியவை இணைந்து, அரசு இ - -சேவை மையங்களை நடத்துகின்றன. இதில், புதிய ஆதார் அட்டைக்கு பதிவு செய்தல் மற்றும் பெயர், முகவரி, கைபேசி எண் போன்ற விபரங்களை புதுப்பித்தல், ஆதார் அட்டையை பதிவிறக்கம் செய்தல், விண்ணப்பத்தின் நிலையை சரிபார்த்தல், விரல் ரேகை, கருவிழி நிலையை பதிவு செய்தல் போன்ற சேவைகள் மேற்கொள்ளப்படுகின்றன. வாலாஜாபாத் வட்டாரத்திற்கான அரசு ஆதார் சேவை மையம், வாலாஜாபாத் தாசில்தார் அலுவலகத்தின் ஒரு பகுதியில் இயங்கி வந்தது. இங்கு நாளொன்றுக்கு 30 நபருக்கு மட்டும்,'டோக்கன்' வழங்கப்பட்டு, அவர்களுக்கு மட்டும் சேவை செய்யும் நிலை உள்ளது. இதனால், மையத்திற்கு வந்து சேவை பெற முடியாமல் பலரும் திரும்பச் செல்லும் நிலை இருந்தது. குறிப்பாக பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். இதற்கு தீர்வாக, வாலாஜாபாத் வட்டாரத்திற்கு கூடுதலாக நேற்று, வாலாஜாபாத் பி.டி.ஓ., அலுவலகத்தில் ஆதார் சேவை மையம் துவக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி