உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா துவக்கம்

மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா துவக்கம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் கணேசா நகர் தும்பவனம் மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா துவங்கியது. காஞ்சிபுரம் டெம்பிள் சிட்டி அருகில் உள்ள கணேசா நகர் தும்பவனம் மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா நேற்று முன்தினம் மாலை 3:00 மணிக்கு வரசக்தி விநாயகர் மற்றும் தும்பவனம் மாரியம்மனுக்கு அபிஷேகத்துடன் துவங்கியது. இரவு 7:00 மணிக்கு அம்மன் வீதியுலாவும், இரவு 10:00 மணிக்கு ஊஞ்சல் சேவையும் நடந்தது. நேற்று மாலை 3:00 மணிக்கு மாரியம்மனுக்கு சிறப்பு பால் அபிஷேகமும், மாலை 6:00 மணிக்கு திருவிளக்கு பூஜையும் நடந்தது. இன்று மாலை 4:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், மாலை 4:30 மணிக்கு சிறுவர்களுக்கான விளையாட்டு போட்டியும், மாலை 6:00 மணிக்கு நாட்டிய நிகழ்ச்சி நடக்கிறது. நாளை காலை 9:00 மணிக்கு அம்மன் வீதியுலாவும், மதியம் 12:00 மணிக்கு கூழ்வார்த்தலும், இரவு 7:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்துடன் அம்மன் வீதியுலா நடக்கிறது. இரவு 10:00 மணிக்கு கும்பம் படையலிடப்படுகிறது. விழா நிறைவாக வரும் 28 ம் தேதி காலை 8:00 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகமும், தொடர்ந்து வீதியுலாவும், மதியம் 12:00 மணிக்கு மஞ்சள் நீராட்டும், மதியம் 1:00 மணிக்கு சமபந்தி விருந்தும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை